பிக்பாஸ் 100 ஆவது நாளில் பங்கேற்பீர்களா? – இதற்கு ஓவியா அளித்த பதில் இதுதான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு செப்டம்பர் 30-ம் தேதி நூறாவதுநாள். அந்நாளை சிறப்புநிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட நிகழ்ச்சிக்குழு முடிவு செய்துள்ளதாம். அந்நாளில், இந்நிகழ்ச்சியின் போது ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஜூலி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அனைவருமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அன்றைய தினத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 1- நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இப்போது ரசிகர்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய கேள்வி, இறுதிநாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்வாரா? என்பதுதான்.

அதற்கான பதில் நேற்று கிடைத்தது.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் புதிதாக ‘தி கிரெளன் மால்’ என்ற ஆறு மாடி விற்பனையகத்தைக் கட்டியுள்ளது. இந்தக் கடைக்கான விளம்பரத் தூதராக ஓவியா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தக் கடை திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக ஓவியா பங்கேற்றார்.

அப்போது, பிக்பாஸ் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அவற்றிற்குப் பதிலளித்த ஓவியா, 100 நாள்களுக்கு பிக் பாஸ் பற்றி பேசக் கூடாது என்பது சட்டம். அந்த சட்டத்தை மீறக் கூடாது. அதனால், 100 வது நாள் அன்னைக்கு நான் அங்கே மேடையில் இருப்பேன், அங்கே பார்ப்போம் வெயிட் பண்ணுங்கள். உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. நிபந்தனையற்ற அன்பு கிடைப்பது கஷ்டம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றார்.

Leave a Response