தமிழக அளவிலான சதுரங்கப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலம்மாள்பள்ளி மாணவி

ஆண்டுதோறும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

2017-18 ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப்போட்டிகள், அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 07.09.17 அன்று கோவையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவ,மாணவியர் போட்டிகளில் பங்குபெற்றனர். அங்கு நடந்த 17 வயதிற்குட்பட்டோர் சதுரங்கப்போட்டியில், சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவி செல்வி பூர்ணாஸ்ரீ
கலந்துகொண்டார்.

அதில் அவர் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தான் படிக்கும் பள்ளிக்குச் சிறப்புச் சேர்த்த அவரை ஆசிரியர்களும் சக மாணவர்களும் பாராட்டினர்.

மாணவி பூர்ணாஸ்ரீ எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்று அந்தப்பள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response