கம்யூனிஸ்ட் கட்சி விழா இல்லை, பிக்பாஸில் பிஸி – கமல் தகவல்

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கோழிக்கோடில் செப்டம்பர் 16-ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவுக்கு, நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் சில நாட்களாக உலா வந்துக்கொண்டிருந்தன.

அது சம்பந்தமான விழா அழைப்பிதழும் இணைய தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.அண்மையில் கேரள முதல்வரை கமல் சந்தித்திருந்தார். எனவே இதற்கு வாய்ப்பு இருப்பதாகவே பலரும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

இத்தகவலை நடிகர் கமல் மறுத்துள்ளார். வழக்கம் போல தன்னுடைய ட்வீட்டில், கேரள முதல்வர் நடத்தும் கோழிக்கோடு மார்க்சிஸ்ட் விழாவுக்கு நான் அழைக்கப்படவில்லை. அக்டோபர் மாதம் வரை சனிக்கிழமைகளில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பேன். அந்த விழா நல்லபடியாக நடக்க என்னுடைய வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார்.

Leave a Response