அனிதாவுக்கு ஆதரவாகப் போராடிய அமெரிக்கத் தமிழர்கள்


நீட்டை எதிர்த்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்! அனிதாவிற்கு மரியாதை செலுத்தினர்

செயின்ட் லூய்சு, செப். 3- அமெரிக்காவின் பல மாநிலங் களில் நீட்டை எதிர்த்தும், அனிதாவுக்கு மரியாதை செலுத்தியும் போராட்டங்கள் நடைபெற்றன. மோடி அரசைக் கண்டித்து, தமிழக அரசின் அடிமைத்தனத்தை எதிர்த்துப் பல அமெரிக்க வாழ் தமிழர்கள் கொந்தளித்து உணர்ச்சிகளைக் கொட்டினர் .முகநூல், சமூக வலைத் தளங்கள் அவர்களது ஆதங்கத்தையும் மோடி எதிர்ப் பையும், பார்ப்பனீய சூழ்ச்சியையும் புரட்டி எடுத்தன.

செயின்ட் லூய்சு, டெக்சாசு, அட்லாண்டா, நியூ ஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, சிகாகோ போன்ற இடங்களில் மெழுகுவத்தி ஒளிப்போராட்டம் நடந்தது. நியுஜெர்சியில் வழக்குரைஞர் வீரமர்த்தினியின் மகள் வழக்குரைஞர் கனிமொழி நீட் பற்றி நன்கு
எடுத்துரைத்தார்!

பல குடும்பங்கள் வந்து பங்கேற்றன. வேண்டாம், வேண்டாம் நீட் வேண்டாம், கல்வியை மாநில உரிமையில் கொண்டு வா என்று முழங்கினர்.

Leave a Response