தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார்.தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வையொட்டி சசிகலா ஆதரவாளர்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணங்களின் தொகுப்பு….
டிசம்பர் மாதம்,அம்மா இறந்து 16 ம் நாள், நீங்கள் அனைவரும் இணைந்து சசிகலாவிடம் நீங்கள், நல்லவரா, கெட்டவரோ ?, அம்மாவுடன் 33 ஆண்டுகள் இருந்து கழக நிர்வாகத்தையும் , அம்மாவையும் கவனித்துக் கொண்டு இருந்திர்கள்,இப்போது அம்மா இறந்து விட்டார்கள், நாங்கள் ஒன்றிணைத்து கழகத்தைப் பார்த்து கொள்கின்றோம் . எங்களுக்கு பொதுச் செயலாளர் யாரும் தேவை இல்லை, நாங்கள் வழிகாட்டுதல் குழு அமைத்து கட்சியைப் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விலக்கி வைத்து இருந்தால் நீங்களும் மானஸ்தர்கள், ஒருவேளை உங்களின் ஒற்றுமையைப் பார்த்து சசிகலாவே விலகி இருந்து இருப்பார்.
ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?, மாவட்டம் வாரியாக தீர்மானம் போட்டு அம்மா காப்பாத்துங்க, அம்மா காப்பாத்துங்க என்று போயஸ் வீட்டில் முன்பு அலறினீர்கள் ..
ஒவ்வொருவரும் கட்சியில் அடுத்தவர் கை ஓங்கி விடக்கூடாது என்று பொதுச் செயலாளர் ஆகுங்கள் என்று கூறினீர்கள் . தீர்மானம் இயற்றி ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினீர்கள் .
பிறகு ஒவ்வொரு அமைச்சராக ஓபிஸ் இடம் சென்று கட்சி, ஆட்சி ஒருவரிடம் இருக்க வேண்டும் என்று அவரையும் பதவி விலக வைத்தீர்கள் ..
ஒபிஸ் பிரிந்த போது எல்லாரும் அவர்கூடப் போய் அவரை ஆதரித்து இருக்கலாம்.அதுவும் செய்யல. அப்பவும் அந்த அம்மா ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி உங்களை முதலமைச்சர் ஆகவும்,அமைச்சர் ஆக்கியும் சென்றார்கள்..
அப்போது எல்லாம் சுய புத்தி இல்லாமல் செய்தீர்களா ? இல்லை இப்போதுதான் டெல்லியில் இருந்து புத்தி வாங்கி வந்தீர்களா?
சும்மா இருந்த தேரை இழுத்து தெருவில் விட்ட மாதிரி, வீட்டில் இருந்த அந்த அம்மாவைக் கூட்டி வந்து பொதுச் செயலாளர் , முதல்வர் ஆக்குகிறேன் என்று சொல்லி ஜெயிலுக்கு அனுப்பி.. இப்ப சசிகலா யாரு ?தினகரன் யாரு ன்னு கேக்குறீங்க ??
உலக நடிப்புடா சாமி ?
அப்ப கூட ஜெயலலிதா அம்மா ஏன் இந்த மந்திரி, கழக நிர்வாகிகளை அடிக்கடி மாத்துராங்க? காலிலேயே விழுந்து இருக்குமாறு வைத்து இருந்தார்கள் என்று யோசிச்சேன். இப்ப தெரியுது உங்களை எல்லாம் என் இப்படி நடத்துனாங்கன்னு?
இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.