பிரபாகரன் சுடப்பட்டது எங்கே? கேள்வி கேட்ட விகடன் குழு, பதறிய ஈழத்தமிழர்

ஓர் ஈழத்தமிழரின் முகநூல் பதிவு…

14.08.2017 நேற்றைய தினம் இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான விகடன் பத்திரிக்கை குழுவினர் சிலர் முல்லைத்தீவுக்கு சுற்றுலா, மற்றும் இங்குள்ள நிலவரங்களை தமது பத்திரிக்கையில் செய்திப்படுத்தும் நோக்கத்துடனும் இங்குவந்தனர். (அப்படியே எனது பார்வைக்கு இருந்தது)

அந்த வகையில் அவர்கள் இங்குள்ள முக்கிய இடங்களை பார்வை இடுவதற்காக அவர்கள் வருவதால்…. அவர்களுக்கு இடங்களைக் காட்டுவதற்கு ஒருவர் தேவைப்பட்டதால் அவர்களுடன் இணைந்து இடங்களைக் காட்டுகிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது…

முதலாவதாக இங்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுளிடம் அவர்களை அழைத்துச் சென்றேன்.

விகடன் குழுவினர் முலில் அவர்கள் வந்திருந்த வாகனத்தை விட்டிறங்கி மக்களோடு பேசுவதற்கு சற்றுப் பயப்பட்டனர் இதனால் இங்கு காவல் துறையினரால் பிரச்சினை வராதா என்று பயப்பட்டாலும் பின்பு தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களோடு உரையாடியதுடன் ஔிப்படங்களையும், புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்…….

பின்னர்…..
வாகனம் மெல்ல அருள் மிகு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அலயத்தை நோக்கி நகர்ந்தது. அங்கே சென்று அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டதுடன், புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். அந்த ஆலயத்தின் அருமை பெருமைகளையும், இந்த ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு பற்றியும், விரிவாக அவர்களுக்குைஎடுத்துக் கூறினேன்.
பின்பு அவர்கள் ஆலயத்தின் முன்பாக இருக்கிற நந்திக்கடலையும் புகைப்படம் எடுத்ததுடன்.

இதுதான் #நந்திக்கடல்_ என்று கூறியதும்… அவர்கள் இந்த நந்திக்கடலில்தானே இறுதி யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றது என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. நானும்… அவர்களுக்கு விபரமாக நந்திக்கடல் பகுதியில்தான் இறுதியுத்தம் நடைபெற்றது இருப்பினும் இதுமட்டும் நந்திக்கடல் அல்ல இது நந்திக்கடலின் ஒரு பகுதியே என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

அந்த பதிலை கூறி முடிப்பதற்குள் என்னிடம் அடுத்த கேள்வி ஒன்றையும் என்னிடம் கேட்டனர்…..
*பிரபாகரன் சுடப்பட்ட இடம் எது? அதைக் காட்ட முடியுமா என்பதுதான் அது..?
*இதற்கு நான் எந்தப் பதிலையும் கேள்வி கேட்ட அந்த நபருக்கு கூறாது.. சாவகாசமாக அவர் கேட்ட அந்த கேள்வியை பொருட்படுத்தாது நான் திரும்பிப் பார்த்தபடி நின்றிருந்தேன்…
மீட்டும் அவர் அந்த கேள்வியை கேட்க எத்தனிக்கையில்……
*அந்த குழுவில் இருந்த இன்னொரு நபர் குறுக்கிட்டு “பிரபாகரன் சுடப்படவில்லை தம்பி வாங்க போகலாம்” என்று அழைக்க அந்த குழுவில் இருந்த வர்களுக்கு இடையிலையே கருத்து வேறுபாடும், சலசலப்பும், ஏற்பட வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.
*வாகனம் இப்போது கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை நோக்கி நகர்கிறது…..
*வாகனத்தில் போகும்போதே…….
மீண்டும் அந்த கேள்வியை அந்த நபர் கேட்க….
அவர்களுக்கு பதில் கூறுவதற்கு நிற்பந்திக்கப்பட்டேன் என்றே சொல்லவேண்டும்…….
*பிரபாகரன் என்கிற விடயத்தில் எமது மக்களைப் பொறுத்தவரையில்….. பல கருத்துக்கள் காணப்டுகின்றன.
1.அவர் இன்னும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பது.
2.அவர் ஸ்ரீ லங்கா இராணுவத்திடம் பிடிபட்டு கொல்லப்பட்டாராாம்…. என்பது
3.ஸ்ரீ லங்கா இராணுவம் அவர் வெளியேறி தப்பிக்கும் போது சுட்டுக் கொண்டனராம் என்பது
4. இவைகள் தவிர பிரபாகரன் ஆரம்ப காலத்தில் இந்திய அமைதிப்படையினர் அவரைத்தேடி திரிந்த காலத்தில் அவர் அவர்களின் கைகளில் அகப்படக் கூடாது என்பதற்காக அவர் மண்ணெண்ணை கலனுடனும் தீப்பெட்டியுடனும் திரிந்தாராம் எரிந்து சாவதற்கு…..
இதைவிடவும் அவரது இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிரியிடம் பிடிபட்டால் உண்பதற்கு சைனைட் எனும் நச்சுமருந்தை அவர் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

இவற்றை வைத்துப் பார்க்கும் போது பிரபாகரன் தனது முடிவைத் தானே எதோ ஒரு வளியில் தேடியிருக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர். என்று மிகத் தெளிவாக கூறியதுடன்…….
*பிரபாகரன் எங்கு சுடப்பட்டார் என்ற கேள்வியை என்னிடம் கேட்டதால் தப்பித்தீர்கள் வேறுயாரிடமும் இந்த கேள்வியைக் கேட்காதிர்கள் கேட்டல் அடித்து விடுவார்கள் நம் மக்கள் என்பதையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.
இதையும் விட அவர்களிடம் இன்று எமது முல்லை மக்கள் படுகிற துன்ப துயரங்களையும் அடாவடித்தனமாக இடம்பெறுகிற முஸ்லிம், மற்றும் சிங்கக்கடியேற்றங்கள் பற்றியும் தெளிவாகக் கூறினேன் நான் கூறிய விடையங்களை அவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்…

*கேப்பாப்புலவுக்குச் சென்று அங்கு மக்களை அவர்கள் நேரம் போதமையால் பார்வையிடவில்லை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர் இருப்பினும் காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பான விடையங்களை அவர்களுக்கு மிகத் தெளிவாக அவர்களுக்கு ஒப்புவித்தேன் அவர்களும் குறிப் பெடுத்துக்கொண்டனர் இடங்களின் பெயர்களையும் என்னிடம் மிகச் சரியாக எழுதித்தரும்படி எழுதி வாங்கினர்
*இப்போது வாகனம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை நோக்கி நகர்கிறது…..
*அங்கு சென்றும் பார்வையிட்டதுடன் இராணுவம் இருப்பதுபற்றியும் கல்லறைகளையே காணமுடியவில்லையே என்றும் கேள்வி எழுப்பினர்
*எமது அடையாளங்கள் அழிப்பதறகாகவே இவ்வாறு செய்யப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்தினேன்
*அதையும் குறிப்பெடுத்துக்கொண்டனர்…
*பின்னர் வட்டுவாகல் பலத்தை பார்வையிட்டதுடன். பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலையும் பார்வையிட இனிதே பயணம் நிறைவு பெற்றது.
*இந்த பயணத்தில் பார்வையிட்ட இடங்களும் கலந்துரையாடல்களும் எந்தளவிற்கு நன்மையளிக்கப் போகிறது என்பது பற்றி நான் அறியேன்…..
*இருப்பினும் அவர்கள் எடுத்த குறிப்புக்களில் எமது உள் நாட்டுப் பிரச்சினைகளையும்….. எமது உறவுகள் படும் துன்பத்தையும் அவர்களிடம் ஒப்புவித்திருக்கிறேன்….

அவர்கள் எடுத்த குறிப்புக்களை தமது பத்திரிக்கையில் செய்தித் துணுக்காகவோ அல்லது கட்டுரையாகவோ எமது பிரச்சினைகளைப் பன்முகப்படுத்துவதன் மூலம் எமது பிரச்சினைகளை அனைவரும் பார்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு வரலாம்…..?? எனபதே எனது நோக்கமும் ஆதங்கமும்.

வி.சரவணன்(சரா)

Leave a Response