
புதியகீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கிய ஜெகன்நாத், இப்போது இயக்கியிருக்கும் படம் என் ஆளோட செருப்பக் காணோம். இந்தப்படத்தில் சிம்பு பாடியுள்ள ஒரு பாடல் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அதுபற்றி இயக்குநர் ஜெகன்நாத் கூறியிருப்பதாவது…
செருப்பைப் பற்றிய பாடலுக்கு,பாராட்டியும், திட்டியும் வருகிற விமர்சனங்களை நான் மனதார ஏற்கிறேன்….
இந்தப் பாடல் மூன்றே( ச ரி ப )என்னும் ஸ்வரங்களில் கம்போஸ் செய்யப்பட்டது.குறிப்பாக ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன்,
செருப்பு ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை.அதன் பயன்பாடு கீழ்த்தரமானதும் அல்ல.ஜோடி என்னும் சொல்லுக்கு சரியான, பொருத்தமான பொருள் செருப்பு மட்டும்தான்.ஒன்றைத் தவிர்த்து மற்றொன்று பயன்படாது.
படைப்பாளிகளுக்கு எவ்வளவு படைப்பு சுதந்திரம் உள்ளதோ,அதைவிட அதிகமான சுதந்திரம் ரசிகனுக்கும் உண்டு… (ஒரு சிலர் ) பாடல் வரிகளை எவ்வளவு தான் கிழித்துத் தொங்கவிட்டாலும் பாடல் வரிகளையோ ,”என் ஆளோட செருப்பக்காணோம் ”
என்கிற படத்தின் தலைப்பையோ மாற்றிவிடுவோம் என்று மட்டும் யாரும் எண்ணிவிட வேண்டாம்….அது நடக்காது.போய் வேலையைப் பாருங்கள் நண்பர்களே…
இவ்வாறு ஜெகன்நாத் சொல்லியிருக்கிறார்.


