
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடும் காக்கிச்சட்டை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 370 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கிறது. இது, சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகளவு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல்முறையாக பெரிய ரஜினி, கமல், அஜித், விஜய். சூர்யா அல்லாத ஒரு படம் வெளிநாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்ற பெருமையை காக்கிச்சட்டை பெற்றுள்ளது.
இப்படம் பிரான்ஸ் நாட்டில் 20 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பாவில் உள்ள ஒருசில நாடுகளிலும் காக்கிச்சட்டை படத்தை வெளியிட திரையரங்குகள் முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற பெரிய ஸ்டார்களுக்கு மட்டும்தான் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பு இருந்தது. அந்த வரிசையில் முதல்முறையாக சிவகார்த்திகேயனும் இடம்பிடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இலண்டன் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இந்தப்படத்தின் பிரிமியர் என்று சொல்லப்படும் முதல் திரையிடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறதாம். துபாயில் நடக்கும் நிகழ்வில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
