ஓவியாவின் துணிச்சல் அழகு – பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல இயக்குநர் பாராட்டு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும்வரவேற்பும் அதே அளவு எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அந்நிகழ்ச்சியை வரவேற்று இயக்குநர் சீனுராமசாமி பேசியிருக்கிறார். அவருடைய பதிவில்,

பிக்பாஸ் நாம் வெறும் புறங்கூறுதல் அதாவது பொறணி என்று பார்க்கக் கூடாது கலைத்துறையில் வெற்றி பெற தவிப்பவர்கள் முயன்று கொண்டிருப்பவர்கள் இவர்களை ஒன்றாக இருக்கச் செய்தல்.அதுதான் கதை.

நாம் அனைவருமே கதாபாத்திரங்கள்,நுட்பமான திரைக்கதையாளர் கதாபாத்திரங்களால் விளையாடுகிறார். அவர் கமலாகவும் இருக்கலாம் கடவுளாகவும்.இருக்கலாம்.

காயத்திரியின் நடிப்பாற்றல்,சினிமாவில் இதுவரை பயன்படுத்தாத வையாபுரியின்நகைச்சுவை,சக்தி,நமிதா,வெங்கட்ராம்,போன்ற நடிகர்களின் திறன்,ஒவியாவின் அடக்குமுறைக்கு எதிரான துணிச்சல் அழகு,ஸ்னேகனின் திறமை காணமுடிகிறது.

நீங்கள் நம்பினாலும்.நம்பாவிட்டாலும் அது ஈர்க்கும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response