விஜய்சேதுபதி படத்தில் இருந்து பி.சி.ஸ்ரீராம் விலகியது ஏன்..!?


ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பெரிய படம், சின்னப்படம் என்கிற பாகுபாடு எல்லாம் பார்ப்பதில்லை.. மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ என இரண்டு படங்களும் அவரை பொறுத்தவரை ஒன்றுதான். அந்தவகையில்தான் ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்கும் ‘அநீதிக்கதைகள்’ என்கிற படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார்.

ஆனால் தற்போது அந்தப்படத்தில் பாதியில் இருந்து வெளியேறி இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்.. படம் பாதி முடிந்த நிலையில் சில பொருளாதார காரணங்களால் ‘அநீதி கதைகள்’ படத்தின் மீதி படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டது.

அதையடுத்தே தற்போது அதிலிருந்து விலகி ‘ரெமோ’ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் புதியவரான பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கவுள்ள படத்திற்கு சென்றுவிட்டார் பி.சி.ஸ்ரீராம். இதை தொடர்ந்து தேசிய விருதுபெற்ற ஒளிப்பதிவாளரான வினோத் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்றுள்ளாராம்.

Leave a Response