அரசாணை பெற 35 ஆயிரம் இலஞ்சம் கொடுத்தேன் – இயக்குநர் ஆச்சார்யா ரவி குற்றச்சாட்டு

பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ரவி. ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய பின்பு ஆச்சார்யா ரவி ஆனார். இவர் இயக்கத்தில் 2012 இல் வெளிவந்த படம் ‘என்ன தான் பேசுவதோ’.

தற்போது கமல், உங்கள் துறைகளில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்துங்கள் என்று அழைப்பு விடுத்ததையொட்டி, ஆச்சார்யா ரவி எழுதியுள்ள முகநூல் பதிவில்,

என் படம் ‘என்ன தான் பேசுவதோ’ படத்திற்கு வரி விலக்கு பெறுவதற்காக காலில் கையில் விழுந்து அழாத குறையாக 35000 ரூபாய் தண்டம் கொடுத்தேன் இவரது (அமைச்சர் எம்.சி.சம்பத்) உதவியாளரிடம்…

நான் அழுத 35000 அரசாணையை பெறுவதற்கு மட்டுமே…

என் படத்திற்கு tax free க்காக பார்த்தவர்கள் L.R.easwari m.n.rajam, A L.raghavan ஆகியோர் அடங்கிய குழு. அவர்கள் ok சொல்லிவிட, மறு நாள் அமைச்சர் ஆபீஸீலுருந்து போன் வந்தது. வாங்க வந்து பேசுங்க என்று..நான் மறுத்து விட்டேன்…மூன்று மாதமாகியும் tax free order கிடைக்காததனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தேன்…பயந்து போய் அமைச்சர் கையெழுத்திட்டார்…ஆனால் அந்த அரசு ஆணையை வாங்க மிகவும் சிரமப்பட்டேன். இறுதியில் 35000 கொடுத்து தலைமை செயலகத்தில் 9th floorல் அந்த நகலை பெற்றேன்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response