2ஆம் பாகம் எடுக்க தயாராகும் ‘மரகத நாணயம்’ இயக்குனர்..!


சமீபத்தில் வெளியான படங்களில் ரசித்து பார்க்கும் விதமாக, நகைச்சுவையாகவும் பேன்டசியாகவும் வெளியான படம் தான் ‘மரகத நாணயம்’.. இந்தப்படத்தில் ராஜா காலத்தில் உருவாக்கப்பட்ட மரகத நாணயம் ஒன்று எப்படி இந்த காலகட்டத்திற்குள் பயணிக்கிறது, தன்னை தேடுபவர்களை எப்படி பழிவாங்குகிறது என நகைச்சுவையாக சொல்லியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவண்.

இந்தப்படத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பு காரணமாக இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இயக்குனருக்கு உருவாகியுள்ளதாம். ஆனால் உடனே இரண்டாம் பாகத்தை எடுத்தால் அது ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்பதால், வேறு ஒரு படத்தை இயக்கிவிட்டு தனது மூன்றாவது படமாக இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவண்.

Leave a Response