நளினியை இன்னும் எப்படியெல்லாம் வஞ்சிப்பார்கள்?


இந்தியத்தின் கோரப்பற்கள் இந்த பெண்ணை இன்னமும் எப்படி எல்லாம் வஞ்சிக்கும்?

உலகிலேயே அதிக காலம் தனது கோர வஞ்சனையால் நீண்டகாலம் சிறையில் அநீதியாக முடக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் நளினி என்ற விருது இழிந்த இந்தியாவுக்கு கிடைத்தாலும் வியப்பதற்கில்லை.

வாழவும் விடாமல் சாகவும் விடாமல் ஒரு பெண்ணை கொடுமை படுத்தும் இந்திய அராஜகம் ஒழிக.

இந்திய மண்ணில் பிறந்த நளினியின் குழந்தை தனது தாயை, தந்தையை பார்க்க பிறந்த மண்ணுக்கு வர அனுமதி இல்லை.

பிள்ளையை தனிமைப்படுத்தி நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக நளினி வதைக்கப்படுகின்றார். ஏழு தமிழர்களுக்கு நடக்கும் நீட்சியான சிறை அடைப்பு கொடுமை உலக தமிழர்களால் கண்டிக்கப்பட வேண்டும்.

சிறையில் கூட அவரை நிம்மதியாக வாழ விடாமல் இடம் மாற்றி தனிமைப்படுத்த முயல்கிறார்கள்.

துன்புறுத்தல் தாங்க முடியாமல் நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றார் தன்னை புழல் சிறைக்கு மாற்ற கோரி.

அடிப்படை உரிமைகளை கூட மதிக்காத இந்திய சிறைக்கொட்டடியில் இந்த அப்பாவி பெண்ணின் குறைந்த பட்ச வேண்டுதலையாவது வஞ்சக இந்தியம் நிறைவேற்றுமா?

ஏழு தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைக்கு இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் பதில் சொல்ல வேண்டும். காரணம் குடிமக்களின் பாராமுகங்களே அரசுகளை எதேச்சை அதிகாரத்தோடு தொண்டர்ந்தும் தான்தோன்றித்தனமாக செயல்பட வைக்கின்றன.

Leave a Response