
11-06-17 பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள். இதையொட்டி சீமான் வெளியிட்டுள்ள குறிப்பில்….
தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க!
தமிழ்மொழி வாழ்க – வென் றுரைப்போம்! – அதால்
தமிழினம் மலர்க – வென் றழைப்போம்!
தமிழ்இனம் வாழ்க! தமிழ்இனம் வாழ்க!
தமிழ்இனம் வாழ்க – வென் றுரைப்போம்! – அதில்
தமிழினம் தழைக்க – வென் றுழைப்போம்!
எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த் திடல் வேண்டும்- என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!
என்று தன் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை, தமிழுக்கும் தமிழருக்குமாக உழைத்த பெருந்தகை!
நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவுநாள் இன்று (11-06-2017)
தனித்தமிழ்ப் பாவலர்!
தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி!
நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


