தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி இயக்குனர்களுடன் அவர்களது படங்களில் பணியாற்றி வருபவர்கள் தான் இரட்டை எழுத்தாளர்கள் சுபா. இவர்கள் இயக்குனர் கே.வி.ஆனந்தின் படங்களில் ஆரம்ப காலம் தொட்டே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு வருட வருடங்களுக்கு முன் மோகன்ராஜாவுடன் இணைந்து இரட்டையர்கள் சுபா பணியாற்றிய ‘தனி ஒருவன்’ படம் மெகா ஹிட் ஆனது.
அந்தப்படம் தான் தெலுங்கில் ராம்சரண் நடிக்க ‘துருவா’ என்கிற பெயரில் ரீமேக்காகி ஹிட்டானது. இதை தொடர்ந்து தெலுங்கில் இருந்தும் சுபாவுக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. இப்போது கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்தில் கதாசிரியர்களாக பணியாற்றுவதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கின்றனர் இந்த இரட்டை கதாசிரியர்கள். சித்தார்த் நடித்த ‘180’ படத்தை இயக்கிய ஜெயேந்திரா தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.