மோடி அரசின் முக்கியமான மூன்றாண்டு வேதனைகளின் பட்டியல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த மூன்றாண்டுகளில் அவர்கள் செய்த முக்கியமான வேதனைகள்.

1. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி பொதுமக்களுக்குப் பெரும் துன்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய கோமாளித்தனம்.

2. அதன் மூலம் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தோல்வி

3. பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலை, கார்ப்பரேட்டு களையும், சாமியார்களையும் தூக்கி வளர்க்கும் போக்கு.

4. சமூகநீதி, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்பாடுகள்.

5. ஜனநாயகத் தன்மையற்ற எதேச்சதிகாரப் போக்குகள்.

6. மாநில அரசுகளைத் துச்சமாக மதித்தல், மாநில அரசு உரிமைகளைப் பறித்தல்.

7. பசு வதைத் தடுப்பு என்ற பெயரால் உண்ணும் உரிமையில் கூடத் தலையிடுதல்.

8. பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது வன்முறைகளை ஏவுதல்.

9. ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டுதல்.

10. இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு.

11. கல்வியைத் காவி மயமாக்குதல், எதிலும் இந்துத்துவ அணுகுமுறை.

12. ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் அலட்சிப் போக்கு.

13. வறட்சி நிதியாக தமிழ்நாடு அரசு 39,565 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், 1,748 கோடி ரூபாய் மட்டுமே வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

14. தமிழ்நாட்டின் முழுக் கடன் விடுதலை என்பது 86 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை.

15. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதி அளித்துள்ளது.

16. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க, அதன் ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

17. நியூட்ரினே ஆய்வு மய்யம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது இவை எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கு விரோதமான செயல்கள

18. அகில இந்திய மருத்துவ அறிவியல் உயர்கல்விக் கூடம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முந்தைய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு பெருந்துறையை எய்ம்ஸ் அமைக்க சிறந்த இடமாக அறிவித்தும், ‘தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்க ஒரு இடம்கூட சரியாக இல்லை’ என்கிறது பி.ஜே.பி. அரசு

Leave a Response