
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்த தமன், இசையமைப்பாளராக தனது ரூட்டை மாற்றி இன்று தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குகிறார். குறிப்பாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் தமன் தான் இசையமைத்து வருகிறார்..
இந்தநிலையில் பிரபல பாலிவுட் மாஸ் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘கோல்மால் 4’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய இசையமைப்பாளரான தமன் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இது குறித்து இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
