மே-28ல் துவங்குகிறது ரஜினியின் 161வது படம்..!


ரஜினி தற்போது ஷங்கர் டைரக்சனில் நடித்து வரும் ‘2.O’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார். அடுத்ததாக மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. இன்றுமுதல் தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி பேச்சுவாக்கில் தனது அடுத்த படம் வரும் மே-28ல் துவங்குகிறது என குறிப்பிட்டார்.

ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வில் தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி இன்னும் தெளிவான உறுதியான முடிவை கூறாவிட்டாலும், அப்படி அரசியலுக்கு வரும் பட்சத்தில் தன்னை வைத்து அரசியலில் ஆதாயம் அடையலாம், பணம் சம்பாதிக்கலாம் என நினைப்பவர்களுக்கு தன்னிடம் இடமில்லை என்பதை கூறி சுயநல ரசிகர்களின் ஆசைக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

Leave a Response