
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என நம்ம ஊரில் பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். தான் உயிரோடு இருக்கும்போது உதவுவதாக வாக்களித்த ஒருவருக்கு தான் இறந்தபின்னும் உதவிய ஒரு உத்தமர்தான் இந்த சீதக்காதி. இஸ்லாமியரான இவரை பதினெட்டாம் நூற்றாண்டு பாரி வள்ளல் என்றுகூட சொல்வார்கள்..
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் தான் அடுத்ததாக இயக்கவுள்ள படத்திற்கு ‘சீதக்காதி’ என்றுதான் பெயர் வைத்துள்ளார் என்பது தெரியும். அதேசமயம், பெயர் வைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வள்ளலின் வாழ்க்கை வரலாற்றைத்தான் படமாகவும் எடுக்க இருக்கிறாராம்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்தைத்தான் அவர் இயக்குவதாக இருந்தார்.. ஆனால் இடையில் ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்த ‘ஒரு பக்க கதை’ படத்தை இயக்க போய்விட்டதால், மூன்றுவருடம் கழித்து இப்போது சீதக்காதி படத்தை ஆரம்பித்துவிட்டார்.


