விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் யாருக்காவது பிறந்தநாள் வந்துவிட்டால் போதும். கட் அவுட், பலாபிஷேகம் என்று தேவையற்ற செலவுகளில் பந்தா காட்டும் சில்வண்டுகளாகத்தான் ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள்.

அந்தவகையில் நடிகர் விக்ரமின். இன்று பிறந்தநாள் ரசிகர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் வழக்கம் போல் விக்ரம் பிறந்தநாளை கொண்டாடாமல், ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்தனர். நடிகர் விக்ரம் பிறந்தநாள்.

பொதுவாக அவரது பிறந்தநாளை, ரசிகர்கள் கோலகலமாகக் கொண்டடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் அன்று ரசிகர்கள் ரத்த தான முகாம் நடத்துவார்கள். அதேபோல், இந்த ஆண்டும் தென் சென்னையைச் சேர்ந்த விக்ரம் ரசிகர்கள் ரத்ததான முகாம் நடத்தின்ர்.

அதில் பலர் ஆர்வத்துடன் ரத்த தானம் கொடுத்தனர். வருடம்தோறும் இது தொடரும் என ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Response