ஐஸ்வர்யாவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி..!


கடந்த அக்டோபர் மாதம் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ், இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் ஸ்டண்ட் காட்சி இயக்குனர்களும் கவுரவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கோரிக்கையை ஏற்று, இது தொடர்பாக பரிசீலனை நடத்திய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அடுத்த ஆண்டு நடைபெறும் 64-வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறப்பான வகையில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு தேசிய விருது அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ், சினிமா துறையில் சண்டைக் காட்சிகளை அமைத்த கலைஞர்களைப் பற்றி உருவாகி வரும் ‘சினிமா வீரன்’ படத்துக்கு குரல் கொடுக்கும் விதமாக எடுத்த முயற்சி வெற்றிபெற்றுள்ளது. மேலும், சிறந்த ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒலிப்பதிவாளர் என்ற பிரிவின்கீழும் அடுத்த ஆண்டில் இருந்து தேசிய விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response