நல்லாசிரியர் விருது பெற்ற வேலம்மாள் பள்ளி முதன்மை முதல்வர்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தாண்டு தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 5 அன்று நடந்தது. விழாவுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலர் த.சபிதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

விழாவில், தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 379 பேருக்கு ‘நல்லாசிரியர் விருது’களை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
இவர்களுக்கு வெள்ளிப் பதக்கம், ரூ.10,000 ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேலம்மாள் பள்ளியின் முதன்மை முதல்வர் திருமதி ஜெயந்தி ராஜகோபாலன் தமது ஒப்பற்ற 25 ஆண்டு கால கல்விச் சேவைகளுக்காக மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.

அவரை வேலம்மாள் பள்ளி நிர்வாகமும். மாணவச் சமுதாயமும் இவ்விருது பெற்றமைக்குப் பாராட்டி மகிழ்ந்தனர்.

Leave a Response