பா.ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ இன்னும் முடிவாகவில்லை..!


‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கப்போகும் புதிய படத்தில் யார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது பற்றி பலவாறான தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அடுத்து அவர் சூர்யாவை வைத்துதான் படம் இயக்குவார் என்றே அதிகப்படியான செய்திகள் வெளியாகி வருகின்றன.

காரணம் ‘கபாலி’ படத்தை இயக்கும் வாய்ப்பும் திடீரென ரஞ்சித்தை தேடிவந்தபோது அவர் சூர்யாவுக்கான கதை விவாதத்தில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பின் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் மற்றும் சூர்யாவிடம் அனுமதி பெற்றுத்தான் ‘கபாலி’ படத்தை இயக்க வந்தார். அதனால் அவர் சூர்யாவுக்குத்தான் படம் இயக்குவார்கள் என பலரும் சொல்லிவருகிறார்கள்..

ஆனால் தற்போது புதிய படத்தின் கதை விவாதத்தில் ரஞ்சித் பிஸியாக இருக்கிறார் என்றும் அது முடிந்ததும்தான் அவர் யாரை வைத்து படம் இயக்குவார் என்கிற அதிகாராப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் இப்போது இயக்குனர் ரஞ்சித் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response