
தமிழ்நாடு முதலமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்ற பிறகு முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டும், புதிதாக நியமிக்கப்பட்டும் வருகின்றனர்.
அந்தவகையில்,நடிகர் விஜய்க்கு நீண்டகாலமாக ஆஸ்தான சோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்,முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்,நடிகர் விஜய் கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முதன்மைப் பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் அரசியல் ரீதியான நகர்வுகள் மற்றும் கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளில் இவர் இனி முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நியமனத்துக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.பல்வேறு தரப்பினரும் இதுகுறித்துக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அரசின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி ஏதாவது ஒரு விளக்கத்தை அளிக்க முடியுமா? என்று கேட்டுள்ளார் காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில். ஜோதிடருக்கு அரசு பதவி ஏன் வழங்கப்பட்டது என்று புதிதிக பொறுப்பேற்றுள்ள அரசு உரிய விளக்கம் அளிக்குமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் சமூகவலைதளப் பதிவில்,
எனக்கே புரியவில்லை.ஒரு ஜோதிடருக்கு ஏன் OSD (சிறப்புப் பணி அதிகாரி) பதவி தேவைப்பட வேண்டும்? யாராவது விளக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.


