தமிழ்நாடு தேர்தல் முடிவு – சீமான் கருத்து

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் கட்டுத்தொகை கூடப் பெறாமல் தோல்வி அடைந்தனர்.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சீமான் அளித்த பேட்டி….

எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது.இவ்வளவு பேசிய பிள்ளைகளுக்கு,இவ்வளவு போராடிய பிள்ளைகளுக்கு, உண்மையும் நேர்மையுமாக இருந்த மற்றும் மாற்று அரசியலை எடுத்து வைத்த பிள்ளைகளுக்கு வாக்களித்து 8 விழுக்காடு கொடுத்திருக்கக் கூடாதா? என்ற வருத்தம் இருக்கிறது.

நான் சட்டப்பேரவைக்குள் போகவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை.நாட்டை வெல்லாமல் 2 அல்லது 3 இடங்களை வென்று ஒன்றும் செய்யப் போவதில்லை.ஆனாலும் போயிருக்கலாம்.மக்களின் குரலாகவும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் குரலாக சட்டமன்றத்தில் பேசியிருக்கலாம்.அதற்கான வாய்ப்பு வரவில்லை.அது நமது தோல்வி அல்ல.மக்களின் தோல்வி.

எங்கள் பிள்ளைகளின் உழைப்பு அசாத்தியமானது.இன்னும் 10 ஆண்டுகள் கூட நாம் போராடுவோம்.ஆனால் உறுதியாக வெல்வோம்.100 விழுக்காடு மக்களை நம்புகிறோம்.மக்கள் நம்மை நம்பும்வரை போராடுவோம்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Leave a Response