நெருங்கும் புயல் – சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்​கக் கடலில் நில​வும் `டிட்​வா’ புயல் இன்று காலை சென்​னையை நெருங்கு​கிறது. இதையொட்​டி, திரு​வள்​ளூர், இராணிப்​பேட்டை ஆகிய மாவட்​டங்​களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது….

தென்​மேற்கு வங்​கக்​கடல், அதையொட்​டிய வடக்கு இலங்கை பகு​தி​களில் ‘டிட்​வா’ புயல் நிலை கொண்​டுள்​ளது. இது மேலும் வடமேற்​காக நகர்ந்து இன்று (நவம்பர் 30) காலை வடதமிழ்நாடு மற்​றும் அதையொட்​டிய தெற்கு
ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இன்று மாலை புயல் சென்​னை​யை நெருங்​கி வரும்.

இதன் காரண​மாக, இன்று வட தமிழ்நாட்டில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு
இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் இலேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். டெல்​டா, தென் தமிழ்நாடு கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் மணிக்கு அதி​கபட்​சம் 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வட தமிழ்நாடு கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தில் தரைக்​காற்று வீசக்​கூடும்.

இன்று திரு​வள்​ளூர், இராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் அதி​க​னமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்​யக்​கூடும்.
சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி,
தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர் மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

நாளை திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் கனமழை​யும், மற்ற பகு​தி​களில் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழ்நாடு கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல், மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று அதி​கபட்​ச​மாக 90 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக்​கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Leave a Response