
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் நடிகர் கருணாஸ்.
கடந்த ஒரிரு நாட்களுக்கு முன் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் இளைஞர் அணிச்செயலாளர் அஜய் வாண்டையார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் தங்களது ஆதரவு கடிதத்தைக் கொடுத்துள்ளனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


