
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்க்யிருக்கிறார்கள். ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
மே 3 ஆம் தேதியோடு இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடையவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் மேலும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் அடித்தட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியே நீட்டித்துக் கொண்டே போனால் பணக்காரர்கள் வாழ்வார்கள். ஏழைகள் எல்லாம் அழிந்து போவார்கள். இதைத்தான் இந்த அரசாங்கம் விரும்புகிறதா? என்று ஆத்திரத்துடன் கேள்வியெழுப்புகிறார்கள்.


