
புலிகளுக்கு எவரும் வணக்கம் செலுத்துவது தெரியவந்தால் அவர்கள் கைது செயயபபடுவார்கள் என எச்சரிக்கப்பட்ட நிலையில் தமிழீழ நிலமெங்கும் இராணுவமும் புலனாய்வாளர்களும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் சூழலிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு எழுகையோடு நடைபெற்றது.
அத்தனை புலிகளும் எம் உறவுகள் தான். ஆம் நாம் உறவுகளுக்கு தான் வணக்கம் செலுத்தினோம். ஆம் நாம் எம் புலி பிள்ளைகளுக்கும் தான் வணக்கம் செலுத்தினோம் என்ற நிமிர்வையே எம் மக்கள் செயலாற்றி காட்டி இருக்கின்றார்கள்.
எழுகை கொண்ட மக்களை அடக்க உலகில் ஒரு சக்தியாலும் முடியாது.
இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகள் முற்பகல் 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
அகவணக்கத்தை தொடர்ந்து முதன்மைச்சுடரினை முதலமைச்சர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சுற்றிலும் பெருமளவில் இராணுவப்பபுலனாய்வினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலை அச்சுறுத்தலாக இருந்தது.
நினைவேந்தலையடுத்து புதுக்குடியிருப்பு சிவன் கோவிலில் வீரச்சாவடைந்த மாவீரர்கள்,பொதுமக்களிற்கு விசேட ஆராதனை நடத்தப்பட்டிருந்தது.அங்கும் முதலமைச்சர்,அமைச்சர்கள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர்.அதனை தொடர்ந்து வள்ளிபுனம் பகுதியினில் மக்கள் பங்கெடுத்திருந்த நினைவேந்தல நிகழ்விலும் முதலமைச்சர் கலந்து கொண்டிருந்தார்.கூட்டமைப்பினது நினைவேந்தலிற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் இந்திய தூதரகம் தலையிட்டு நினைவேந்தல் அனுமதியினை பெற்றுவழங்கியதாகவும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஆகியோர் தெரிவித்தனர்
—செந்தமிழினிபிரபாகரன்.
