ஐபிஎல் – அசத்திய டெல்லி சொதப்பிய சென்னை

ஐபிஎல் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பில் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இதில் ப்ரித்வி ஷா 17(17) ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19(22) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனை அடுத்து அதிரடியில் கலக்கிய ரிஷப் பந்த் 38(26) ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் ஆட வந்த கிளென் மேக்ஸ்வெல் 5(7)ரன்னிலும், அபிஷேக் ஷர்மா 2(4)ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது.

அதன்பின் ஒரளவு தாக்குப்பிடித்து விளையாடிய விஜய் சங்கர்36(28) ரன்களும், எச்.பட்டேல் 36(16)ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ஷேன் வாட்சன் 14(23) ரன்களில் மிஸ்ரா பந்தில் கேட்ச் ஆனார். பின்னர் அதிரடியில் கலக்கி கொண்டிருந்த ராயுடு 50(29) ரன்கள் எடுத்திருந்த போது பட்டேல் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ரெய்னாவுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் ரெய்னா 15(18) ரன்னில் கேட்ச் ஆகி வெளியெறினார். அடுத்து ஆட வந்த பில்லிங்ஸ் 1(5) ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார்.

அடுத்ததாக டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். டெல்லி அணியின் பந்து வீச்சில் சென்னை அணி வீரர்கள் ரன் சேர்க்க போராடினர். அடுத்த விக்கெட்டாக கேப்டன் டோனி 17(23) ரன்னில் போல்ட் பந்து வீச்சில் கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக களமிறங்கிய பிராவோ 1(2) ரன்னில் வெளியேறினார். முடிவில் ஜடேஜா 27(18) ரன்களும், சாகர் 1(2) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக மிஸ்ராவும், போல்ட்டும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இறுதியில் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது.

Leave a Response