நடிகர் திலகத்தை அவமானப்படுத்தி உங்கள் அதிகாரத்தைக் காட்டாதீர்கள் – குஷ்பு கோபம்

அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார். இவ்விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இது சம்பந்தமாக சிவாஜி கணேசன் குடும்பத்தின் சார்பில் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு,தமிழ் சினிமா மூலம் நமது கலாச்சாரத்தை, தமிழ் மொழிக்கு பெருமைகளைச் சேர்த்தவர் எங்கள் அப்பா! மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கனவுத் திட்டமான சிவாஜியின் மணிமண்டப திறப்பு விழாவில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் மற்றும் அனைத்து அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள் என்று தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நடிகர் திலகத்தை தமிழ்நாடு அரசு அவமானப்படுத்துகிறது. இந்தியத் திரையுலகத்திற்கு, முக்கியமாக தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மேதை அவர். தமிழக முதல்வரே.. துணை முதல்வரே.. தமிழக அரசே.. உங்களுக்கு மேதைகளை மதிக்கத் தெரியாவிட்டால், நடிகர் திலகத்தை அவமானப்படுத்தி உங்கள் அதிகார அணுகுமுறையை காட்டாதீர்கள்..

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

Leave a Response