
தமிழ்நாட்டில் ஒரு கோடி தலித்துக்கள் இருக்கிறார்கள் அவர்களின் வாக்குகள் இல்லாமல் எந்த கட்சியும் வெற்றிவாகை சூடமுடியாது ..2016 ககான முதல்வர் வேட்பாளர் அன்புமணி திருமாவளவனை அழைக்கனும் கிருஷ்ணசாமியை அழைக்கணும் என்று தமிழருவி மணியன் பேசியிருக்கிறார்,
இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இயக்குநர் சிபிசந்தர் கடும் எதிர்வினையாற்றியிருக்கிறார், அவருடைய கருத்து….
மதிமுக மற்றும் தேமுதிக பாமக போன்ற கட்சிகளை பாஜகவிடம் மண்டியிட வைத்ததில் பெரும்பங்கு மணியனுக்கு உண்டு அவர்களின் உதவியால் பாஜ்க வை மணியன் தமிழகத்தில் ஊடுறுவ வைத்ததன் விளைவு தொலைக்காட்சியின் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டை பிரயோகிக்கும் அளவிற்கும் அர்ஜுன் சம்பத் போன்ற ஆட்கள் இஸ்லாமியர்களையும் கிறிஸ்த்தவர்களையும் மதம் மாற்றியே தீருவேன் என சபதம் ஏற்கும் அளவிற்கும் வளர்த்தியிருக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம் …
பாஜக விடம் முரண்பட்டது போல் நடிக்கும் இந்த மணியன் தற்போது பாமக வை முன்னிறுத்தும் சித்து வேலையை துவங்கியிருக்கிறார் அதுவும் அன்புமணியை முன்னிறுத்துவதில் குறியாக செயல்படுகிறார் இந்த செயல்பாட்டிலியே இவரின் கள்ளத்தனம் தெரிகிறதா இல்லையா ?
இந்த மணியன் இன்னும் இன்றும் இந்த நொடிவரை பாஜகவின் பிடியில்தான் வாழ்கிறார் அவர்களின் ஏஜண்ட்டாக மறைமுகமாக செயல்பட்டு இந்துத்வ கோட்பாடுகளை கடுமையாக எதிர்க்கும் தலித்துக்களை விளிம்புநிலை மக்களை பாஜ்கவிடம் மண்டியிட வைக்கும் அரசியல் விளையாட்டின் துவக்கம் தான் அன்புமணி திருமாவையும் கிருஷ்ணசாமியையும் அழைக்க வேண்டும் என்ற அறை கூவல் அரைவேக்காட்டுக்கூவல் …
அய்யா மணியன் அவர்களே
எம் தலைவரின் முழக்கத்தை தங்களின் உச்சந்தலையில் ஓங்கி அறைகிறேன்
பலியாவதற்கு நாங்கள் ஆடுகள் அல்ல சீறிப்பாயும் சிறுத்தைகள்


