தமிழருக்குத் துரோகம் செய்த ராகவாலாரன்ஸுக்கு எதிராக அதிரடி முடிவு

மெரீனாவில் நடந்த தைப்புரட்சியின்போது நடிகர் ராகவாலாரன்ஸ் நடந்துகொண்ட விதம், பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்விளைவு, இனிமேல் அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களைப் புறக்கணிப்போம் என்கிற குரல்கள் எழத்தொடங்கியிருக்கின்றன.

திரைப்பட இயக்குநரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னணியினரில் ஒருவருமான சிபிசந்தர் இது தொடர்பாக எழுதியுள்ள பதிவில்,

இன்று (27.01.2017) எனது திருமணநாள் அதிகாலை எழுந்து நானும் என் மனைவியும் மகளும் எடுத்துக்கொண்ட சத்தியம்
தமிழினத்தின் பாரம்பரியப் பெருமையான ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரும் போராட்டத்தில் மதம் சாதி கட்சி போன்ற பேதங்களைத் தவிர்த்த இளையோர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் தன்னுடைய சினிமா பிரபலத்தை பயன்படுத்தி ஆரம்பத்திலியே ஊடுறுவி, அதிகார வர்க்கம் திட்டமிட்டு கொடுத்த நாடகத்தை கண கச்சிதமாக அரங்கேற்றி முடிவில் ஒருமித்த உணர்வோடு கூடிய இளையோர்கள் படுகாயம் படுவதற்கும் தஞ்சம் கொடுத்த அடித்தட்டு மக்கள் கோரத் தாக்குதலுக்கு ஆளாகியும் வழக்குகளை சுமந்தும் வதைபடுவதற்கு காரணமானவரும் …

மெரீனா மற்றும் தமிழகமெங்கும் இளையோர்கள் தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டிருந்த நிலையில் ஆளும் வர்க்கத்தோடு கைகலுக்கி தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவருமான நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடித்த படம் என்றால் என் மனைவியும் மகளும் அவரின் திரைப்படத்தை காண தவறமாட்டார்கள் ஆனால் எதிர்காலத்தில் அப்படியில்லை …

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழின உணர்வை கொச்சைப்படுத்தி எமதினம் வதைபடுவதற்கு மூல காரணியாக செயல்பட்ட ராகவா லாரன்ஸ் அவர்களை சட்டத்தின் மூலமாகவோ அதிகாரத்தின் மூலமாகவோ என்னால் தண்டிக்க இயலாது அதெல்லாம் அவர் பக்கம் இருக்கிறது …

அவரையும் அவரின் திரைப்படங்களையும் முழுதாகப் புறக்கணிப்பதன் மூலமே அவரைப் பழி தீர்க்க முடியும் என நானும் எனது குடும்பமும் ஆணித்தரமாக நம்புகிறோம் …

தற்போது வெளியாகவுள்ள “ சிவலிங்கா “ மொட்ட சிவா கெட்ட சிவா “ ஆகிய திரைப்படங்களையும் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள அவரின் படங்களோ அவரின் பங்களிப்புள்ள படங்களோ எதுவாக இருப்பினும் முற்றிலுமாக தவிர்ப்பது என சத்தியம் செய்துள்ளோம்.

அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் அவரின் விளம்பரத்திற்கு நீர் ஊற்றியது போலாகிவிடும் ..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவருடைய இந்தக்கருத்துக்கு ஆதரவு பெருகிவருகிறது.

Leave a Response