
எழுத்தாளர் சாருநிவேதிதா, கமல்,ரஜினி ஆகிய இருவருமே பாஜகவின் முகவர்கள்தாம் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்த அவருடைய முகநூல் பதிவு….
கமலை விமர்சித்ததும் என்னை ரஜினி ரசிகன் என்று வசை பாடியிருக்கிறார் அஜித் ரசிகர் கணேஷ் அன்பு. அதற்கு என் பதில்:
ரசிகனா? ரஜினியிடம் ரசிக்க என்ன இருக்கு? தனிப்பட்ட முறையில் எனக்குக் கமலைத்தான் பிடிக்கும். இப்போது அவர் மோடியின் ஏஜெண்டாகக் களம் இறங்கி இருக்கிறார். அதனால்தான் விமர்சிக்கிறேன்.
அடுத்த ஆட்சி திமுகவாக இருக்கக் கூடாது, இருந்தால் பிஜேபி தமிழ்நாட்டில் தலையே எடுக்க முடியாது என்று மோடியால் நியமிக்கப்பட்ட பிஜேபி கொபசெ கமல்.
பிஜேபிக்கு ரஜினியும் வேண்டும், அது காவிக்கு. கமலும் வேண்டும், அது கருப்புச் சட்டைக்கு. ரெண்டு பேருமே பிஜேபி ஏஜெண்டுகள்
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


