
கடந்த பிப்ரவரி மாதம் ஜெயம் ரவி-அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான படம் தான் போகன்’.. கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வைத்து ஹை-டெக் கதையாக இந்தப்படத்தை இயக்கியிருந்தார் லட்சுமண். இந்தப்படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்திருந்தார்.. படம் மிகப்பெரிய ஹிட் இல்லையென்றாலும் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெறவும் தவறவில்லை..
இதுபோன்ற சப்ஜெக்ட்டுகள் தெலுங்கு ரசிகர்களுக்கு அல்வா மாதிரி. அதனால் இந்தப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். ஜெயம் ரவி கேரக்டரில் ரவிதேஜாவும், ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரசாவும் நடிக்க இருக்கிறார்கள். அரவிந்த்சாமி கேரக்டருக்கு தெலுங்கில் முக்கிய நடிகர் ஒருவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள். தமிழில் இருந்ததுபோல அல்லாமல் சில மாற்றங்களுடன் இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.


