தினமணி, தினமலர், தி இந்து நாளேடுகள் செய்த வேலையைப் பாருங்கள்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட செய்தி இன்று நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.

“கடலில் கரைக்கப்பட்டன” என்கிற செய்தியை இன்றைய தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு வெளியிட்டுள்ளன என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்து பாருங்களேன்.

‘தினத்தந்தி’, ‘தினகரன்’ இரண்டும் கடலில் கரைக்கப்பட்டன என்றே குறிப்பிஉள்ளன.

ஆனால் ‘தி இந்து’த்துவா, தினமலர், தினமணி இம்மூன்றும் மட்டும் செய்தி வெளியிட்டுள்ள பாணி என்ன தெரியுமா?

“விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன”

அருமையான தமிழ்ச் சொற்கள் உள்ளபோது இப்படியான வடமொழிச் சொற்களை நைசாகப் புகுத்துவது என்ன சாமர்த்தியம்…?

இந்த மூன்று பத்திரிகைகளின் ஆசிரியர் பொறுப்பில் பிராமணர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடக்கிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

Leave a Response