
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. இதனையடுத்து 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தங்களது தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மூன்று பேரும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் அமித்வராய், சரத் பாப்டே ஆகியோர் சீராய்வு மனுவை நீதிபதிகள் அறையில் நேற்று விசாரித்தனர்.
இன்று 3 பேரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ததோடு நீதிபதிகள் அறையில் விசாரிக்காமல்,நீதிமன்ற வளாகத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்தவிட்டனர். சிறை தண்டனை மற்றும் அபராதத்தை உறுதி செய்தனர்.
இதற்கடுத்து என்ன? சீராய்வு மனுவுக்கு மேல் ஒன்றுமில்லை,அவர்கள் நான்காண்டு தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்று ஒரு கருத்து இருக்கிறது. அடுத்து CURATIVE PETITION என்றொரு மனு இருக்கிறது, அதை தாக்கல் செய்யவேண்டும் என்றொரு கருத்தும் இருக்கிறது.


