இன்றைய பாடல் வரியை டைட்டிலாக வைக்க முடிகிறதா..? ; ஆர்.வி.உதயகுமார் சூடு..!


பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’.. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் ‘வேலையிலல்லா விவசாயி’ படத்தின் துவக்க விழாவும் இன்று நடைபெற்றது.

விழாவில் அரசியல் பிரபலங்கள் உட்பட திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ”இன்றைய பாடல் வரியை படத்திற்கு டைட்டிலாக வைக்க முடிகிறதா..? என சூடுபறக்க கேள்வி எழுப்பினார்.

இது பற்றி அவர் மேலும் பேசியதாவது, “எம்ஜி.ஆர் காலத்தில் கருத்துள்ள நல்ல படங்கள் வந்தன. ஆனால் இப்போது ‘ங்கொய்யால’ என பாடல் எழுதுகிறார்கள், ஆபாச வரிகள் வருகிறது. உங்கள் பேரன் ங்கொய்யால பாடலை எழுதியவர் எங்கள் தாத்தா தான் என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கேவலம். “வானத்தை போல மனம் படைத்த மன்னவனே“ என்ற பாடலை நான் எழுதினேன், வானத்தை போல என்ற தலைப்பை வைத்தார் இயக்குனர் விக்ரமன். இப்ப உள்ள பாடல்களை தலைப்பாக வைக்க முடியுமா என்று பேசினார் ஆர்.வி.உதயகுமார்.

Leave a Response