
நகமும் சதையும் போல இருந்தவர்கள் தான் தனுஷும் இசையமைப்பாளர் அனிருத்தும்.. ‘கொலவெறி’ பாடல் இருவருக்குமே உலகளவில் அங்கீகாரம் தந்தது மறுக்க முடியாத உண்மை.. தொடர்ந்து தனுஷ் படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத், சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்து அவரை சந்தோஷப்படுத்தினார்..
ஆனால் சிம்புவுடன் இணைந்து பீப் பாடல் விவகாரத்தில் தனது பெயரை கெடுத்துக்கொண்டார் அனிருத்.. அப்போதிருந்து அனிருத்தை ஒதுக்க ஆரம்பித்த தனுஷ், தனது படங்களுக்கு வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்தார். குறிப்பாக ஷான் ரோல்டன் என்கிற இளம் இசையமைப்பாளரை தொடர்ந்து தனது படங்களில் பயன்படுத்தி வருகிறார் தனுஷ்..
அந்தவிதமாக வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் அனிருத்தை ஒதுக்கிவிட்டு ஷான் ரோல்டனை இசையமைக்க வைத்துள்ளார் தனுஷ். இதற்கான உண்மையான காரணம் என்ன என்கிற கேள்வி சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷிடம் நேரடியாகவே முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தனுஷ், “முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தின் கதையம்சம் சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்பட வேண்டியது என்பதால் ஷான் ரோல்டனின் இசையை தேர்ந்தெடுத்தேன். மீண்டும் மூன்றாம் பாகும் எடுக்கும் ஐடியா இருக்கிறது. அதற்கு அனிருத்தின் இசை தேவைப்பட்டால் மீண்டும் அவரை பயன்படுத்துவேன்” என கூறியுள்ளார்.


