இரண்டு பாகங்களாக வெளியாகும் சிம்பு படம்..!


சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இதில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, நீத்து சந்திரா, சனா கான் ஆகிய நான்கு பேர் நடிக்கின்றனர்.

இந்தப்படம், 2 பாகங்களாக வெளிவர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் சிம்பு. முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி அளவுக்கு இப்படி பில்டப் கொடுக்கிறார்களே என படம் குறித்து கவலைப்படுகிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள்.

Leave a Response