பாஜக ஆளும் மாநிலத்தில் மதுக்கடையைச் சூறையாடிய பெண்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டன. அங்கிருந்து மதுக் கடைகள் 500 மீட்டர் தூரத்தில் ஊருக்குள் மாற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகளும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமோலி மாவட்டம் கோபேஸ்வர் என்ற இடத்தில் மதுக்கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு மூடப்பட்டு இருந்த மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பெண்கள் அடித்து உடைத்தும் தரையில் வீசியும் சூறையாடினார்கள்.

காவல்துறையினர் பாதுகாப்பையும் மீறி மொத்தம் 50 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களும் அழிக்கப்பட்டன.

தகவல் கிடைத்ததும் கூடுதல் காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகு நிலைமை கட் டுக்குள் வந்தது. இது பற்றி கண்காணிப்பாளர் பிரீத்தி பிரியதர்ஷினி கூறுகையில், காவல்துறையினரைவிட போராட்டம் நடத்திய பெண்கள் அதிக அளவில் இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.

இதே போல் சம்பா மாவட்டத்திலும் பல இடங் களில் மதுக்கடைகள் சூறையாடப்பட்டன. தலைநகர் டேராடூனில் மதுக்கடைகளை எதிர்த்து பெண்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.

Leave a Response