லைகா நிறுவனம் அரசியல் செய்கிறதா?


ரஜினியின் இலங்கை பயண ரத்து அறிவிப்பைத் தொடர்ந்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதியில்,

எங்களுக்கும் முன்னயை ஆட்சியளர்களான ராஜபக்ஸக்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக வதந்திகளையும், புனை கதைகளையும் உருவாக்கியவர்கள் எமது வர்த்தக சாம்ராட்சியத்திற்கு எதிரான போட்டியாளர்கள் என்பது உலகறிந்த விடயம்.
இப்படியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு எந்தவொரு ஆதாரமுற்றவை என்பதனை எமது வாழ்வும், எமது செயற்பாடுகளும் நிருப்பித்துக்கொண்டு இருக்கின்றன. அதனால் எமது வர்த்தக செயற்பாடுகளோடும், சமூகம் சார்ந்த முன்னுதாரண திட்டங்களோடும் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்க முடியாதவர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.
இப்படியான வதந்திகளை பரப்புவதன் ஊடாக தமது குறிய லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்துடன் எமது போட்டி வியாபாரிகளிடம் ஏதாவதொரு வகையில் கடமைப்பட்ட காரணத்தினால்தான் இப்படியான ஆதாரமற்ற , உண்மையற்ற வதந்திகளை இவர்கள் முன்வைக்கிறார்கள் என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இத்தகைய அரசியல்வாதிகள் இன்று எமது தாயகத்தில் அல்லலுறும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் அவர்களின் எதிர்கால நன்மைக்கும் எதுவும் செய்ததில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தொலைக்காட்சி விவாதத்தில் பேசியதற்காக வேல்முருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் படமெடுக்க வந்திருக்கும் லைகா நிறுவனம், அரசியல்கட்சிகளைப் போல அறிக்கைப்போர் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது பலரையும் வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

Leave a Response