
தெலுங்கில் வெளியாகும் படங்களை கௌரவிக்கும் விதமாக ஆந்திர மாநில அரசால் 1964-ல் இருந்து நந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.நந்தி விருதுகள். 2011-க்குப் பிறகு ஆந்திரா, தெலுங்கானா பிரச்னையால் இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது.
இப்போது மீண்டும் அந்த விருதுகளை அறிவித்திருக்கிறது ஆந்திர அரசு. முதல் கட்டமாக 2012 மற்றும் 2013-ம் வருடங்களுக்கான விருதுகளை அறிவித்திருக்கிறது. இதன்படி 2012-ம் ஆண்டுக்கான விருதுகள் வரிசையில், ‘ஏதோ வெள்ளிப்போயிந்தி மனசு’ படத்தில் இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல கேரள அரசும் கடந்த வருடம் ஜனவரி மாதம் நிஷாகந்தி புரஸ்காரம் என்ற கேரள அரசின் விருதை இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.


