துல்கர் படத்தை தயாரிக்கும் இருமுகன் தயாரிப்பாளர்..!


மலையாள பட நடிகரான துல்கர் சல்மான் ‘வாயை மூடி பேசவும்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பாலாஜி மோகன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தார்.

இப்படமும் ரசிகர்களை கவர்ந்தாலும், மலையாளப் படங்கள் கைவசம் அதிகம் இருந்ததால் மலையாளத்தில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான்.

இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜய்யின் ‘புலி’, விக்ரமின் ‘இருமுகன்’ ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

Leave a Response