கர்நாடகாவில் தடையை உடைத்த அஜித் படம்..!


கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் நேரடியாகவோ அல்லது டப்பிங் செய்யப்பட்டோ ரிலீஸாகி செமத்தியாக கல்லா கட்டிவந்தன. இதனால் கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக டப்பிங் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்பட கூடாது என தடைவிதிக்கப்பட்டிருந்தது..

அந்த தடை இந்த வாரத்தில் இருந்து விலகுகிறது.. தடையை விளக்கி முதல் ஆளாக நுழையும் பெருமையை அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் பெற்றுள்ளது.. இந்தப்படம் கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐ.பி.எஸ்’ என்கிற பெயரில் மார்ச்-3ஆம் தேதி ரிலீசாகிறது.

கடந்த 2015ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா இருவரும் நடித்திருந்தார்கள். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்க, வில்லனாக நடித்திருந்தார் அருண்விஜய். அவருக்கு இது இது திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response