
சரித்திர கதையம்சத்தை கொண்ட கமல்ஹாசனின் லட்சியப்படமான ‘மருதநாயகம்’ படப்பிடிப்பு 1997-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தபோது, அதனை ராணி எலிசபெத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த காட்சிகளுடன் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் நிதி நெருக்கடியால் பட வேலைகள் திடீரென்று நிறுத்தப்பட்டது.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவில் இந்திய சார்பில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் ராணி எலிசபெத்தை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
இந்த சந்திபின்போது 20 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் மருதநாயகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை ராணிக்கு கமல்ஹாசன் நினைவூட்டினார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது, “. ராணி எலிசபெத் இந்தியாவுக்கு வந்தபோது எனது படப்பிடிப்பு அரங்குக்கு வந்து இருந்தார். அதுகுறித்து அவரிடம் நான் நினைவுபடுத்தினேன். ராணி எலிசபெத் தனது வாழ்நாளில் கலந்து கொண்ட ஒரே படப்பிடிப்பு என்னுடைய படப்பிடிப்புதான். கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்கள் உரையாடல் சிறியதாகவே இருந்தது”. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.


