அடுத்தடுத்து படங்கள் ; பிடிவாதத்தை தளர்த்திய விக்ரம்..!


கடந்த சில ஆண்டுகளாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்திற்கு நடிக்கச் செல்லும் வழக்கத்தை கடைபிடித்துவிந்தார் விக்ரம். குறிப்பாக ‘ஐ’ படத்திற்கு சுமார் இரண்டு வருடங்களை ஒதுக்கி தந்தார்..

சில நேரங்களில் தான் இவ்வளவு காலம் ஒதுக்கி ஒரு படம் மட்டுமே தந்து, அதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை அடையாமல் போவது விக்ரமை வருந்த செய்துள்ளது. அதனால் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களை கையில் வைத்துக் கொண்டு அதில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் ‘துருவநட்சத்திரம்‘ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இந்தப் படத்தில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் நடித்து வருகிறார்.

இதையடுத்து விக்ரம், விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய தாடியை மழித்துவிட்டு, வழக்கமான கருப்புநிற தலைமுடியுடன் போஸ் கொடுத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் தமன்னா, விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். தமன்னாவுக்கு விக்ரமுடன் நடிக்கும் முதல் படம் இது.

விக்ரமை எதிர்க்கும் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். மூன்றாவது படமான ஹரியின் ‘சாமி-2’வின் படப்பிடிப்பும் மே மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Response