மருதமலை அருகில் தியானலிங்கமா? – அறிவுமதி ஆவேசம்


இன்றைய சூழலில் இதுவோர் இன்றியமையாத பதிவு
அறிவாலும் ஆதாரங்களாலும் நம்மால் வெல்ல முடியும்
என்று சொல்லும் அறிவுமதி அவர்களின் பதிவு…

நான் மருதமலை மயில் பேசறேன்
தமிழர்களே!!!
உங்களிடம்தான் பேசறேன்!

பகுத்தறிவுல பேச வரல
பக்தியிலயே பேச வரேன்

முருகன் யாருன்னு கேட்டா
தமிழ்க் கடவுள்ங்கற
அழகா!

அப்புறம் ஏன் மருத மல
அருகிலே
தியான லிங்கம் சிவன் தலை?

சிவன் முருகன் அப்பன்தானே
நீ கேக்குற.

நான் கேக்கறேன் முருகனுக்கு
அப்பன் சிவன்னு
புறநானூறு அகநானூறு
குறுந்தொகை போன்ற
பழந்தமிழ் நூல்ல
சொல்லப் பட்டிருக்கா? இல்லையே!

தாய் கொற்றவையின்
மகன் என்றுதானே
சொல்லப் பட்டிருக்கு!

30000ஆண்டுகளுக்கும்
முந்தைய
முருகன் தாத்தனுக்கு
7ம் நூற்றாண்டுக்குப் பிறகு
அறிமுகமாகிற ஒரு புராணச்சிலை
எப்படி அண்ணனாகிறது!

இத மறுக்க எவராவது ஆதாரங்கள்
வச்சிருந்தா வாங்க
என்னோட மருத மலைக்கே!

வாதாட காத்திருக்கேன்
ஆதாரங்களோட.

இது மாமல்லை புலிக்குகை
அருகில் புதைந்திருந்து
ஆழிப் பேரலை வந்தபோது
கண்டெடுக்கப்பட்ட
முருகன் கோயில் கல் வேல்!

முழுமுதற்கடவுள் உனக்கு
முருகன் தானே தமிழா!

மலைகள் பார்க்கும்
இடமெல்லாம்
முருகன் கோயில்கள்
கட்டி அழகு பார்த்தத் தமிழன்தானே!

மலேசியாவில் என்ன அழகான
முருகன் சிலை!

சிங்கப்பூர் மொரிசியசு என
உலகமெல்லாம்
போன தமிழர்கள் என் முருகனை
அப்படிப் போற்றிப்
பாதுகாக்கிறார்கள்!

தமிழர்கள் மட்டுமா
இதோ
தன் ஆங்கிலப்பெயரை
வடிவேல் என்றும்
தன் துணைவியின் பெயரை
வள்ளி என்றும்
அதிகார பூர்வமாய்
மாற்றிக் கொண்டு
தைப்பூச காவடி தூக்கி நிற்கும் இந்த
ஆசுத்திரேலியா
மனிதரைப் பார்!

இதோ பால் காவடிகள் எடுக்கும்
சீனப் பெண்களைப்
பார்!

எந்தெந்த நாட்டினரோ நம்
முருகனைப்
போற்றித்
தலைமேல் வைத்துக் கொண்டாடும்
போது
தமிழா தமிழா தமிழா
நீ
முருகனை மறந்து விட்டு
கண்ட
புராணப் பொய்களின் பின்
செல்வாயா?
இது அழகா?

குமரி முனை தமிழ்முனை
தென்புலத்தார் பெருந்தொகையாய்க்
கடல் விழுங்க
எஞ்சிப் பெருகியவர்கள்தாம்
இன்றைய நீங்கள்!

அந்தக் குமரி முனையையும்
வள்ளுவ அடையாளத்தைப்
பின்னுக்குத் தள்ளி
வடவர் அடையாளங்களை
மதவெறி சூழ்ச்சியில்
குவிக்கிறார்கள்!
சிவன் பார்வதி் ஆஞ்சநேயர்
சிலைகள்
இராமயண கண்காட்சி்
விரைவில்
திருப்பதி கிளை!

தமிழர்களே நீங்கள் என்ன
இளித்த வாயர்களா!
உங்கள் வழிபாட்டுக்குரியவர்
யாரென்று கூட
புரியாதவர்களா?

உங்களை ஏமாற்றி்
முருகனுக்குரிய
தமிழ்நாட்டைக் கைப்பற்ற
ஒரு
சூழ்ச்சிக் கூட்டம்
நுழைய வருகிறது.
என்ன செய்யப் போகிறீர்கள்
தமிழர்களே??????

நான் என்ன செய்யப் போகிறேனா?
அற வழியில் போராடத்
தொடங்கி விட்டேன்.
மருதமலை மயில் நான்
எப்படிப் போராடுகிறேனா??
இதோ
இப்படித்தான்

மழை வருகிறது என்று நான்
தோகை
விரிக்கவில்லை!
தமிழ் முருகனுக்கு
எதிராக
வருகிறவர்களுக்காக
மட்டுமல்ல
தமிழர்களே!
நீங்கள் வந்தாலும்
தடுப்பதற்காகத்தான் இந்தத்
தோகைக்
கேடயம்
விரித்துள்ளேன்!!!!!

எல்லாத் திசைகளில்
இருந்தும்
தமிழ்நாட்டைக் கைப்பற்ற
பகைவர்கள் முனைகிற
தவிப்பில் இந்தப் பதிவின் நீளம்
தவிர்க்க முடியவில்லை்
பொறுத்தருளுங்கள்
முருகன் கற்பிக்கப்பட்ட
கடவுள்
இல்லை்அது குறித்து
விரைவில் நூல்
வெளியிடுகிறேன் நன்றி்

-அறிவுமதி

Leave a Response