
சூர்யா-ஹரி கூட்டணியில் வெளியான ‘சி-3’ படத்தை அசைத்து பார்க்கும் விதமாக இயற்கை பல தடைகளை ஏற்படுத்தியது போக, தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில கருங்காலிகளும் சவால்விட்டுத்தான் பார்த்தார்கள்.. ஆனால் கடந்த வியாழன் அன்று வெளியான சூர்யாவின் ‘சி-3’ பட ஒள மூன்றே நாட்களில் 50 கோடியை தாண்டிவிட்டது
படம் வெளியான முதல் நாளே 20 கோடியையும் 2ஆம் நாளில் 14 கோடியையும் வசூலித்த இந்தப்படம் இதன் மூலம் விஜய்யின் ‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் ரெக்கார்டை முறியடித்து, தவிர ரஜினியின் ‘கபாலி’ வசூலான 21.5 கோடிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதே ரீதியில் வசூல் தொடரும் பட்சத்தில்; விரைவில் பைரவா’ படத்தின் கலெக்சன் ரெக்கார்டான 110 கோடி என்கிற இலக்கை இந்தப்படம் எளிதாக ஓவர்டேக் செய்யும் என்பதும் உறுதி. கேரளாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 6.28 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.. அதேபோல கர்நாடகாவில் இதுவரை 3.48 கோடி வசூலித்து அங்கேயும் கபாலிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.


