பிப்ரவரி 1 விஜய், பிப்ரவரி 2 அஜீத் – பரபரக்கும் திரையுலகம்

சிறுத்தை. வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்டமாக மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று சில முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு.

காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள்.

இப்படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு. படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

அஜித் உடலமைப்பை முழுமையாக மாற்றி நடித்துள்ள இப்படத்துக்கு ‘விவேகம்’ என தலைப்பிட்டுள்ளார்கள்.

வி என தொடங்கும் எழுத்து செண்டிமெண்ட் படி பெயர் வைத்து உள்ளனர்.அஜித்தின் வீரம் படம் வெற்றி. அதற்கடுத்து இவர்கள் கூட்டணி படம் வேதாளம். அதுவும் வெற்றி. இது அஜித்தின் 57 வ து படம். இதற்கு விவேகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. ஜூனில் இப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் நாள் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.

Leave a Response